பக்கம் எண் :

உயர்திணை யும்மைத் தொகை முடிபு சூ. 25201

வெள்

இஃது உயர்திணை உம்மைத்தொகைக்கு எய்தாதது எய்துவிக்கின்றது.

இ-ள் : உயர்திணைப் பெயரிடத்துத் தொக்க உம்மைத் தொகை பலர்பால் ஈற்றினதாய்ப் பன்மையுணர்த்தி நிற்கும் என்பர் ஆசிரியர், எ-று.

உ-ம் : மாமூல பெருந்தலைச் சாத்தர், கபில பரண நக்கீரர் என வரும்.

பலசொல் நடைத்து என்றது எண்ணப்பட்டார் பலர் மேலும் வினையேற்கும் வண்ணம் தமக்குரிய ஒருமைப்பால் ஈறு கெட்டுப் பலர்பாற்குரிய ஈற்றினதாகத் திரிதலை.

ஆதி

உயர்திணை உமமைத் தொகைப் பெயர்கள் பலர்பால் பன்மை இயல்புடையன.

கபிலன் பரணன் - கபிலபரணர்.

அண்ணன் தம்பி-அண்ணன் தம்பியர்
சேரன் சோழன் பாண்டியன்-சேர சோழ பாண்டியர்.

குறிப்பு மொழி

416. வாரா மரபின வரக்கூ றுதலு
  மென்னா மரபின் வெனக்கூ றுதலு
மன்னவை யெல்லா மவற்றவற் றியலா
னின்ன வென்னுங் குறிப்புரை யாகும்.      (26)
  
 (வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயலான்
இன்ன என்னும் குறிப்பு உரையாகும்)