பக்கம் எண் :

202தொல்காப்பியம்-உரைவளம்

ஆ. மொ. இல.

The expression by which subjects which
do not have the capacity of coming are
said to have come and those which cannnot
speak are said to have spoken and such
modes of expression are the ways
indicating what their nature is.

பி. இ. நூ.

நன். 409

கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயங்குந போலவும் இயற்றுந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப் படுமே.

இ. வி. 347

(தொல்காப்பியச்சூத்திரமே)

முத்து ஒ. 105, 114

வாரா மரபின வரஇயம் புதலும்
என்னா மரபின எனஇயம் புதலும்
அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான்
இன்ன வென்னும் குறிப்புரை யாகும்
கேட்குந போலவும் கிளக்குந போலவும்
இயற்றுந போலவும் இயங்குந போலவும்
அஃறிணை மருங்கினும் அறையப்படுமே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மேல் தொகையதிகாரங் கூறினான், அவையெல்லாம் விட்டு இனி, ஒரு சொல் மரபு வழூஉக் காத்தல் நுதலிற்று.

உரை : இயங்காதவற்றை இயங்குவது போலச் சொல்லுதலும், சொல் நிகழாதவற்றைச் சொல் நிகழ்த்துவன போலச் சொல்லுதலும், அவ்வப் பொருளியைபு பற்றி அவை அன்ன செய்கையுடையவற்றைப் போலச் சொல்லுற்றான்; அது மனக்குறிப்பினான் ஆய்ந்து, அவற்றது உரையன்று என்பது கொள்க.