பக்கம் எண் :

குறிப்பு மொழி சூ. 26203

‘அன்னவையெல்லாம்’ என்பது அவ்வாரா மரபினவும் பல் வகைய ஒரோ வோன்றே யல்ல என்றற்கு என்பது.

வாராமரபின வரக்கூறுதல் வருமாறு : மலை வந்து கிடந்தது, நெறி வந்து கிடந்தது எனவரும். மலைக்கும் நெறிக்கும் அன்னசெய்கை இன்றாகலின் என்பது.

இனி என்னா மரபின எனக்கூறுதல் வருமாறு : நிலம்வல்லென்றது, நீர் தண்ணென்றது, இலை பச்சென்றது எனவும், 2‘செங்கால் நாராய்’ எனவும் வரும்.

விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு 3மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பினவாகப் புலப்படுதலால் இது சொல்லப்பட்டது என்பது.

சேனா

இ-ள் : வாராவியல் பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்னா இயல்பினவற்றை என்பனவாகச் சொல்லுதலும் அத்தன்மையான வெல்லாம் அவ்வப் பொருள் இயல்பான் இத்தன்மையவென்று சொல்லுங் குறிப்பு மொழியாம், எ-று.

உ-ம் : அந்நெறி யீண்டு வந்து கிடந்தது, அம்மலை வந்து இதனோடு பொருந்திற்று எனவும், *அவலவல் என்கின்றன நெல், மழை மழை யென்கின்றன பைங்கூழ் எனவும் வரும்.


1. அன்ன செய்கை - அப்படிப்பட்டசெயல் - அதாவது வருதல்.

2. ‘செங்கால் நாராய்’ எனத் தொடங்கும் புறப்பாடலில் ( ) நாரை பேசுவதைப் போலக்கூறியது காண்க.

3. மறுதலைமாற்றம்-மறுமொழி-அதாவது ஆறுதல் மொழி.

* பள்ளம் வேண்டும் பள்ளம் வேண்டும் என்கின்றன நெல். அவல்-பள்ளம், தாழ்ந்த பகுதியிடம். மழை மழை என்கின்றன பைங்கூழ்-பயிர்கள் மழை வேண்டும் மழை வேண்டும் என்று கூறுகின்றன போல் காணப்படுகின்றன.