அவை வரவும் சொல்லுதலும் உணர்த்தாது 1இன்ன என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு கண்டு கொள்க. முலை வந்தன, தலை வந்தன என்பன காட்டுவாரும் உளர். ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டாகலான் அவை ஈண்டைக்காகா வென்க. நிலம் வல்லென்றது, நீர்தண்ணென்றது என்பன காட்டினாரால் உரையாசிரியர்களின், 2சொலற்பொருள வன்மையின் அவை காட்டல் கருத்தன் றென்க. 3அன்னவை யெல்லாம் என்றதனான், இந்நெறியாண்டுச் சென்று கிடக்கும், இக்குன்று அக்குன்றோடு ஒன்றும் என்றும் தொடக்கத்தன கொள்க. தெய் ஒருசார் சொற்களுக்குக் குறியிடுதல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : வாரா மரபினவற்றை வருமாகக் கூறுதலும், என்னாமரபினவற்றை என்றனவாகக் கூறுதலும் அத்தன்மைய பிறவும் எல்லாம் அவற்றவற்றியல்பினான் இத்தன்மைய என்னும் குறிப்புரையாகும், எ-று. வாராமரபின என்றதனாற் செலவு வரவு என்பன கொள்ளப்படும். என்னாமரபின என்றதனான் நினைத்தலும் சொல்லுதலும் செய்தலும் கொள்ளப்படும்.
1. அவலவல் என்கின்றன நெல் - அவல் செய்யும் நிலையில் விளைந்து விட்டேன் என்கின்றன நெற்கதிர்கள். 2. சொலற்பொருள அன்மையின்-சொல்லும் குறிப்புப் பொருளை அல்லாமையின்-அதாவது அவற்றின் இயல்பேயாகலின். 3. செல்லா மரபின சென்றதுபோலக் கூறுதலும் ஒன்றா மரபின ஒன்றுவதுபோலக் கூறுதலும் கொள்க என்பது இவ்வுதாரணங்களின் மூலம் குறித்தபடி. |