அன்னவை யெல்லாம் என்றதனான் காணாமரபின கேளாமரபின என்பன கொள்ளப்படும். இவ்வாறு சொல்லுதல் குற்றமாயினும் சொல்லுவான் குறிப்பு மொழியாயிற்று. இதனானே சில சொற்களுக்குக் குறிப்பு மொழி எனவும் குறியிட்டாராம். உ-ம் : அம்மலை வந்து இதனோடு பொருந்திற்று. மலை வருதல் இன்மையின் அதுவும் இதுவும் ஒன்றிக் கிடந்தது என்னும் பொருண்மை குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது. 1சென்றது கொல் போந்தது கொல் செல்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி-முன்றில் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு உழந்துபின் சென்றவென் நெஞ்சு இதனுள் வந்தன வெல்லாம் குறிப்புமொழி யென்று கொள்க. ‘அன்னச் சேவல் அன்னச் சேவல் (புறம். 67) என்னும், புறப்பாட்டினுள் ‘இரும்பிசிராந்தை யடியுறையெனின்’ என்பது அன்னச்சேவலைக் குறித்துக் கூறுதலின் சொல்லா மரபின சொல்லுமாக வந்த குறிப்பு மொழி. ‘நீலம் உண்டதுகில்’ - நீலம்பற்றின துகில் என்னும் பொருண்மை குறித்து உண்டதாகக் கூறப்பட்டது. பிறவுமன்ன. நச் இது, தொகை அதிகாரம் விட்டு மரபுவழுக் காக்கின்றது. இ-ள் : வாராமரபின வரக்கூறுதலும்-இயங்காதனவற்றை இயங்குவனவாகக் கூறுதலும், என்னாமரபின எனக் கூறுதலும் சொல்லாதனவற்றைச் சொல்லுவனவாகச் சொல்லுதலுமாகிய
1. பொருள் : “அரண்மனை முற்றத்தில் முழங்கும் மதநீரையுடைய யானையையும் செறிந்த மலர்களால் ஆனமாலையையும் உடைய பாண்டியனுக்கா வருந்தி அவன் பின்னேபோன என் நெஞ்சமானது அவனிருக்குமிடம் சென்றதோ? அவன் செவ்வி பெறுமளவும் நேரே தன் இடுப்பில் கையை யூன்றிக் கொண்டு நின்றதோ? யாது செய்ததோ அறியேன்”- இது தலைவி கூற்று. |