பக்கம் எண் :

206தொல்காப்பியம்-உரைவளம்

அன்னவையெல்லாம்-அத்தன்மையன எல்லாம், அவற்றவற்று இயல்பான் - அவ்வப் பொருள்களின் இயல்பு காரணத்தான், இன்னஎன்னும் குறிப்புரையாகும் - இத்தன்மைய என்று சொல்லும் குறிப்பு மொழியாம், எ-று.

உ-ம் : அந்நெறி யீண்டுவந்து கிடந்தது
 அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று,

எனவும்,

அவலவல் என்கின்றன நெல்
மழை மழை யென்கின்றது பைங்கூழ்

எனவும் வரும். இவை வரவும் 1சொல்லும் உணர்த்தாது ‘இன்ன’ என்பதனைக் குறிப்பான் உணர்த்தியவாறு காண்க.

இனி, ஒன்றென முடித்தல் என்பதனால் 2 கவவு அகத்திடும்’ (உரி. 59) என்றாற்போல அச்சொலின் பொருட்டொழிலை அச்சொல்மேல் ஏற்றிக் கூறுவனவும், ஆயிரம் காணம் வந்தது என்றாற்போல ஒருவனால் இயக்கப் பட்டதனைத் தான் இயங்கிற்றாகப் பொருள் கூறுவனவும், ‘நீலுண்துகிலிகை’ என்றவழி நீலம்பற்றியதனை நீலம் உண்டதாக்கிப் பொருள் கூறுதலும் ‘இப்பொருளை இச்சொல்’ என்றாற்போல வருவனவும் கொள்க.

வெள்

இஃது உலகியலில் வழங்கும் ஒருசார் தொடர் மொழிகள் பற்றிய வழுவமைக்கின்றது.

இ-ள் : வாராத இயல்புடையவற்றை வருவனவாகச் சொல்லுதலும், என்று கூறாத இயல்புடையனவற்றைக் கூறுவனவாகச்


1. செலவும்-பாடம்-இது பொருந்தாது.

2. கவவு என்றும் உரிச்சொல் அகத்திடுதல் என்னும் தொழிற் பொருள்படும் என்பது இதன்பொருள். ஆனால் தொடர்ப்போக்கு, கதவு என்னும் சொல்லே ஒன்றை அகத்திடும் என்னும் பொருள் தருமாறு அமைந்திருக்கிறது. அகத்திடாத ஒன்றை அகத்திடும் என்றதை ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ள வேண்டும்.