சொல்லுதலும் அத்தன்மையன வெல்லாம் அவ்வப் பொருளின் இயல்பால் இத்தன்மையன என்று சொல்லுங்குறிப்பு மொழிகளாம், எ-று. உ-ம் : அவ்வழி இங்குவந்து சேர்ந்தது, அம்மலை வந்து இதனோடு பொருந்திற்று எனவும்; அவல் அவல் என்கின்றன நெல், மழை மழை யென்கின்றன பயிர் எனவும் வரும். இவை வருதலையும் சொல்லுதலையும் உணர்த்தாது இத்தன்மையன என்பதனைக் குறிப்பால் உணர்த்தியவாறு காண்க. ஆதி வாராதவற்றை வருவதாகச் சொல்லுதலும், பேசாதவற்றைப் பேசுவதாகச் சொல்லுதலும்-இவையெல்லாம் அப்பொருள்கள் இயல்பால் இத்தன்மை யென்னும் குறிப்பு மொழிகளே. இவ்வழி மதுரைக்குப் போகிறது, ஒருகல் சென்றால் ஒரு மடம் வரும். இந்தத் தெரு அந்தத் தெருவில் வந்து சேரும்-இங்கு வருவது போவது சேர்வது யாதும் இல்லை. கும்பி கூழுக்கு அழுகிறது, கொண்டை பூக்கேட்கிறது - இங்கு அழுவதும் கேட்பதும் இல்லை. இவை குறிப்பால் பொருள் அறிவிப்பன. இசை நிலை யடுக்கு 417. | இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். (27) |
ஆ. மொ. இல. The limit repetition of a word for the purpose of euphony is four times. பி. இ. நூ. (அடுத்த சூத்திரத்திற் காண்க) (இளம்பூரணரும் சேனாவரையரும் வெள்ளைவாரணனாரும் இச்சூத்திரத்தையும் அடுத்து வரும் சூத்திரத்தையும் இயைபு நோக்கிச் சேர்த்து உரை எழுதினர். உரை அடுத்த சூத்திரத்துக் காண்க) |