விடை : திரிசொல் என்ற சொல்லே திரிந்து வரும் சொல் என்ற பொருள்தருதலின அச்சொல்லிலேயே பொருள் வெளிப்படையாகப் பொருந்தியுள்ளது. இப்படிச் சொற்பொருள் இலக்கணத்தினைச் சொல்லிலேயே தெரியும் படியாக அமைப்பது, ‘சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்’ என்னும் உத்தியினாலாகும். 3. ஒரு சொல், ஒருபொருளைக் குறிக்கும் -இதுஇயற்சொல், ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும்; பல சொல் ஒருபொருளைக் குறிக்கும்; இவை திரிசொல். நீவிர் (சேனாவரையர்) கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத்திரிந்த திரி சொல்லுக்கு உதாரணம் காட்டியுள்ளீர். அவை கிளி, மயில் என்னும் ஒரு பொருளைத்தானே காட்டுகின்றன? திரிசொல்லின் வகையிரண்டனுள் அடங்கவில்லையே? - இதுவினா. விடை : ஆசிரியர் திரிசொல் இருபாற்று என்ப என வகைப்படுத்திவிட்டார். கிள்ளை, மஞ்ஞை என்பன வெளிப்படையாகப் பொருள்காட்டவில்லை என்பதால் திரிசொல் எனல் வேண்டும். ஆனால் இருவகையில் எதில் அடக்கவேண்டும் என நாம் பார்க்க வேண்டும். கிள்ளை என நான் இங்குத்தனிச் சொல்லைக்கூறியிருந்தாலும் அதனுடன் கிளிஎன்னும் பொருளைத் தரக்கூடிய தத்தை முதலிய சொற்களைச் சேர்த்துக்கிள்ளை, தத்தை என்பன கிளி என்னும் ஒரு பொருள் குறித்த திரிசொற்கள் என்று விளக்கம் கொள்ளல் வேண்டும். மயிலைக் குறிக்கும் மஞ்ஞை என்பதை மட்டும் கூறியிருந்தாலும் மஞ்ஞை, தோகை முதலிய சொற்களைச் சேர்த்து, மஞ்ஞை, தோகை என்பன மயில் என்னும் ஒரு பொருள் குறித்த திரிசொற்கள் என்று விளக்கம் கொள்ளல் வேண்டும். அல்லது கிளியை யுணர்த்தும் கிள்ளை என்ற சொல்லே குதிரையையும் உணர்த்துமாகலின் கிள்ளை என்பது பல பொருள் குறித்த திரிசொல் என்று கொள்ள வேண்டும். அவ்வாறே மயிலையுணர்த்தும் மஞ்ஞை என்ற சொல்லே கோழியையும் உணர்த்துமாகலின் மஞ்ஞை என்பது பலபொருள் குறித்த திரிசொல் என்று கொள்ள வேண்டும். திரிசொல் - சங்கர நமச்சிவாயர் கூற்று(மிகப் பொருந்தும்) “இயற் சொல் திரிசொல் என்றது அவற்றின் எழுத்துகள் |