இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் 1மேல் (சூ. 405) இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல் என்றவை மூன்றென்ப ஒரு சொல்லடுக்கு என்புழி 2மூன்று வகையான் அடுக்கி வரப்பெறும் என்றவை எல்லையின்மையான் அவை இத்துணை யென்னும் வரையறை கூறினார் ஈண்டு என்பது. உரை : அம்மூன்றனுள் இசை நிறைத்தற்கு அடுக்கப்படும் பொருள் நான்கு வரம்பாகும், எ-று. இரண்டும் அடுக்கும் மூன்றும் அடுக்கும் நான்கும் அடுக்கும்; நான்கிறந்து அடுக்கா என்பது கருத்து. அது, பாடுகோ பாடுகோ பாடுகோ, பாடுகோ எனவரும், இது நான்கு அடுக்கி வந்தது. இசைநிறையெனவே அது செய்யுட் கென்பது முடிந்தது. இனி 3அம்மூன்றுடன் பொருளொடு புணர்தலை விரை சொல்லடுக்கு என்பது; அதுதான் மூன்று வரம்பு இறவாது என்பது. பாம்பு பாம்பு பாம்பு, தீ த் தீ த் தீ எனவரும். இரண்டு மூன்று இறவாது. மற்று, அசைநிலை 4இனைந்தால் அடுக்கும் என்பது எற்றாற் பெறுதும் எனின், மூன்றடுக்கும் பொருளொடு புணர்தலை முற்கூறற்பாலார்; என்னை? மூன்று நான்கு என்னும்
1. எச்சவியல் சூ. 15-ல் 2. மூன்று வகையான் அடுக்கி வரப்பெறும் என்றவை இசைநிறையடுக்கு, அசைநிலையடுக்கு, பொருளொடு புணர் அடுக்கு. 3. அம்மூன்றுடன் - அம்மூன்றில். 4. இனைத்தால் இத்தனைதடவை. |