பக்கம் எண் :

விரை சொல்லடுக்கு சூ. 28211

எண்ணு முறைமை நோக்கி, அவ்வாறு சொல்லாது 5மயக்கங்கூறிய வதனான் மூன்றின் கீழ்க்கு முதல் இரண்டல்லது இல்லையன்றே? அவ்விரண் டெண்ணினால் அடுக்கப்படும் அசைநிலை என்பது கொள்க என்றவாறு.

வ-று : மற்றோ, மற்றோ; அஃதே அஃதே எனவரும். இரண்டிறவாது என்பதனை இலேசினாற் கொண்டார், இடைச்சொல்லடுக்காதலின் என்பது. ஒழிந்த நால்வகைச் சொல்லும் அடுக்கும்.

சேனா

(இசைப்படு..............................................வரம்பாகும்
விரைசொல்............................................வரம்பாகும்)

இ-ள் : மேற்கூறப்பட்ட ஒரு சொல்லடுக்கினுள் இசை நிறையடுக்கு நான்காகிய வரம்பை யுடைத்து; பொருளொடு புணர்தற்கண் விரைவுப்பொருள்பட அடுக்குவது மூன்றாகிய வரம்புடைத்து, எ-று.

வரம்பாகும் என்றது, அவை நான்கினும் மூன்றினும் இறந்துவாரா, குறைந்து வரப்பெறும் என்றவாறு.

உ-ம் : ‘பாடுகோ பாடுகோ பாடுகோ’ எனவும், ‘தீத்தீத்தீ’ எனவும் வரும்.

அவை மும்முறையானும் இருமுறையானும் அடுக்கி வருதல் 1இவற்றைக் குறைத்துச் சொல்லிக்கொள்க.

இசைப் பொருளாவது செய்யுளின்பம்.


5. மயங்கக்கூறியது. பின்னர்க் கூறவேண்டிய நான்கடுக்கை முன்னரும் முன்னர்க் கூறவேண்டிய மூன்றடுக்கைப் பின்னர்க் கூறியதும் ஆம்.

1. ‘பாடுகோ’ எனத் தொடங்கும் உதாரணத்தை மூன்றாகக் குறைத்தும் ‘தீ’ எனத்தொடங்கும் உதாரணத்தை இரண்டாகவும் குறைத்துச் சொல்லிக் கொள்க.