பக்கம் எண் :

212தொல்காப்பியம்-உரைவளம்

2விரைவிக்கும் சொல்லை விரைசொல் எனறார்.

அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின் அதற்கெல்லை கூறாராயினார். அஃது இருமுறையடுக்கும் என்பது யாண்டுப் பெற்றாம் எனின், அடுக்கு என்பதனாற் பெற்றாம், ஒருமுறை வருவது அடுக்கெனப்படாமையின் என்பது.

3முன்னர்க் கூறப்படும் அசைநிலை அடுக்கி வரும் என்பது அதிகாரத்தாற் கோடற்பொருட்டு ‘இசைநிறையசை நிலை’ என்னுஞ் சூத்திரத்தின்பின் வையாது இச்சூத்திரம் இரண்டையும் ஈண்டு வைத்தார்.

தெய்

(விரைசொல்............................................வரம்பாகும்).

குறிப்புப் பொருள் உணர்த்தும் ஒருசொல்லடுக்கிற்கு வரையறை யுணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : விரைவுப் பொருண்மை குறித்த ஒரு சொல்லடுக்கிற்கு எல்லை மூன்றாகும், எ-று.

உ-ம் : பாம்பு பாம்பு பாம்பு, தீ தீ தீ - இவற்றுள் 1முந்துற்றன பொருள் உணர்த்தின. 2ஏனைய பொருளிலவாயினும் விரைதல் என்பது குறித்தலின் பொருளொடுபுணர்ந்த அடுக்காயின.


2. விரைசொல் என்பது விரையும் சொல் எனத்தன் வினை நிலையில் இருந்தாலும் விரைவிக்கும் சொல் எனப்பிற வினையில் பொருள் கொள்க.

3. சூ. 29-ல் கூறப்படும்.

1. முந்துற்றன - முதலில் உள்ள சொற்கள் பாம்பு, தீ என்பன.

2. ஏனைய - பின்னர் உள்ள பாம்பு பாம்பு, தீ தீ என்பன.