விரை சொல்லடுக்கு சூ. 28 | 213 |
இசைநிறைக்கும் பொருளொடு புணர்தற்கும் எல்லை கூறி அசைநிலை அடுக்கிற்கு எல்லை கூறாமையின் அஃது இரண்டல்லது வரப்பெறா தென்று கொள்க. நச் (விரைசொல்.............................வரம்பாகும்) இது முற்கூறிய பொருளொடு புணர்தல் அடுக்கிற்கு வரையறை கூறுகின்றது. இ-ள் : விரைசொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும்-முற்கூறிய ஒரு சொல் அடுக்கினுள் பொருளொடு புணர்தற்கண் விரைவுபொருட்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பை யுடைத்து, எ-று. உ-ம் : தீத் தீத் தீ எனவரும். அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின் அதற்குப் பேரெல்லை கூறாராயினார். ஒரு முறை வருவது அடுக்கன்மையின் ‘ஒரு சொல்லடுக்கு’ எனவே இருமுறை அடுக்கினமை பெறுதும். அவை பெறவே தீத்தீ, படைபடை என விரைவு பொருளின் சிற்றெல்லை இருகால் அடுக்குதல் கொள்க. இஃது இசைப்படு பொருளுக்கும் ஒக்கும். விரைவிக்கும் சொல் விரை சொல். வெள் (இசைப்படு..............................................வரம்பாகும் | விரைசொல்............................................வரம்பாகும்) |
இவற்றால் முற்குறித்த அடுக்குச் சொற்களுக்கு வரையறை கூறுகின்றார். இ-ள் : முற்கூறிய ஒரு சொல்லடுக்கினுள் இசை நிறைத்தற்கு வரும் அடுக்கு நான்காகிய வரம்பையுடையது; பொருளொடு புணர்தற்கண் விரைவு பொருள்பட வரும் அடுக்கு மூன்றாகிய வரம்பையுடையதாம். |