பக்கம் எண் :

அசை நிலையடுக்கு சூ. 29215

ஆ. மொ. இல.

‘Kandir’, ‘Kondir’, ‘Senrathu’ and ‘poyirru’
-all these-when joining with the
interrogative are said to be expletives.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை வினையியல் ஒழித்து நின்றஒழிபு 1கட்டுரை யெடுத்தது.

வினைச்சொற்கள் இங்ஙனம் வினாவொடுபட்டு நின்றவழியாயக்கால் அசைச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து.

வ-று : கண்டீரோ கண்டீரோ; கொண்டீரோ, கொண்டீரோ; சென்றதே, சென்றதே; போயிற்றே, போயிற்றே என வினாவொடு பட்டவழி அடுக்கி அசைநிலையாய் நிற்கும். அவ்வினாவொடு சிவணாக்கால் வினைச்சொல்லேயாம் என்பது.

2அன்றியனைத்தும் என்பது அவையிற்றைத் 3தொகை கொடுத்துக் கூறினவாறு.

‘வினாவொடு சிவணி’ என்பது ஆ, ஓ என்னும் வினாக்களைக் 4கடையாத்து நின்றவழி என்றவாறு.

சேனா

இ-ள் : கண்டீர் எனவும் கொண்டீர் எனவும் சென்றது எனவும் போயிற்று எனவும் வரும் வினைச்சொல் நான்கும் வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலை யடுக்காம், எ-று.


1. கட்டுரை எடுத்தது - கூறத்தொடங்கியது.

2. அன்றியனைத்தும் - அவையனைத்தும்.

3. தொகை கொடுத்துக் கூறியதாவது என்ணுத் தொகையல்லாமல் அவை அனைத்தும் எனத்தொகுத்துக் கூறியதாம். (அன்றி-அவை) அனைத்தும் என்பது நான்கையும் உணர்த்தும்.

4. கடையாத்து-சொல்லின் கடைசியில் சேர்த்து.