கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லிய வழி அதற்குடம் படாதவன் 1கண்டீரே கண்டீரே என்னும்; ஈண்டு வினைச்சொற் பொருண்மையும் வினாப் பொருண்மையும் இன்மையின் அசைநிலையாயினவாறு கண்டுகொள்க. வரையாது கூறினமையால் ‘கண்டீரே’ எனச்சிறுபான்மை அடுக்காது வருதலும் கொள்க. ஏனையவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம். அவை இக்காலத்தரிய; வந்தவழிக் கண்டு கொள்க. தெய் இதுவும் ஒருசார் அசை நிலையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : கண்டீர் என்பது முதலாக ஓதப்பட்ட சொற்கள் வினாப்பொருள் உணர்த்தும் சொல்லொடு கூடிநின்றவழி அப்பொருள்நிலை யிசைக்குஞ் சொல்லாம், எ-று எனவே, சொற்களோடு கூடாதவழி அசைநிலையாம் என்றவாறாம். உ-ம் : வினாவொடு கூடுதலாவது கண்டீரோ கண்டீரோ என...........................................கண்டீ ரென்ப.............................................. இனி, அவை அசைநிலையாகி வருமாறு 2“படைவிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம்புகின்” (முல்லைக்கலி் 9) என்பதனுள் கண்டீர் என்பது அசைநிலையாயிற்று. ஏனையவற்றிற்கு உதாரணம் வந்துழிக் கண்டுகொள்க. நச் இது வினைச்சொற்களுள் ஒருசாரன அசையாம் என்கின்றது. இ-ள் : கண்டீர் என்றா கேட்டீர் என்றா சென்றது என்றா போயிற்று என்றா அன்றி அனைத்தும் - கண்டீர் எனவும்
1. இக்காலத்தில் பார்த்தாயா பார்த்தாயா என வழங்குவர். 2. பொருள் : இவள் (தலைவி) தெய்வத்துக்குப் பலியாகத் தரப் பாலொடு காமன் கோயிலிற்புக்கால், அக்காமனும் இவளழகைக் கண்டு தன்கையிலுள்ள படையைக் கீழே போட்டுவிடுவான். |