பக்கம் எண் :

அசை நிலையடுக்கு சூ. 29217

கேட்டீர் எனவும் சென்றது எனவும் போயிற்று எனவும் வரும் அவ்வினைச் சொல் நான்கும், வினாவொடு சிவணி நின்றவழி அசைக்குங் கிளவி என்ப-வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலை யடுக்காம் என்று கூறுவர் புலவர், எ-று.

எனவே, வனிாவொடு சிவணாதவழி வினைச்சொல்லேயாம்.

ஒருவன் கூறிய கூற்றிற்கு உடம்படாதான், ‘கண்டீரே கண்டீரே’ கேட்டீரே, கேட்டீரே’ என்றால், வினைச்சொற்பொருண்மையும் வினாப் பொருண்மையும் இன்றி நிற்கும்.

இது வரையாது கூறினமையின் அடுக்காதும் வரும். ஏனையவும் ஏற்புழி அடுக்கியும் அடுக்காதும் வருமாயினும் அவை இக்காலத்து அரிய.

வெள்

இது வினைச் சொற்களுள் சில அசைநிலையாம் என்கின்றது.

இ-ள் : கண்டீர் எனவும் கொண்டீர் எனவும் சென்றது எனவும் போயிற்று எனவும் வரும் அவ்வினைச் சொற்கள் நான்கும் வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலையடுக்காம், எ-று.

ஒருவன் ஒன்று கூறியவழி அதற்கு உடம்படாதான் கண்டீரே கண்டீரே என்னும் அவ்வழி அச்சொற்கு வினைப் பொருண்மையும் வினாப் பொருண்மையும் இன்மையின் அசை நிலையாயினவாறு கண்டு கொள்க. ஏனையவும் இவ்வாறே அடுக்கியும் அடுக்காதும் அசை நிலையாம்.

அன்றியனைத்தும் - அவையனைத்தும்.

ஆதி

*கண்டீர், கொண்டீர், சென்றது, போயிற்று இவை போன்றவை வினாவுடன் பொருந்தி வரும் இடங்களில் அசை நிலையாம்.


* இவர்காட்டிய உதாரணங்கள் இவர் உரைக்குப் பொருத்தம் இல்லை.