சூத்திரம் 280 இஃதுடன் ஒத்து உணரத்தக்கது. தாயுமானவர் | : | அரும் பொன்னே மணியே.......................... துரும்பனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ? தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க் குணமான பரதெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே. | | | | ஒளவையார் | : | மூதுரை : சாந்தனையும் தீயனவே.......................... குறைக்குந்தனையும் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். | | | | நல்வழி | : | ஈட்டும் பொருள் முயற்சி..........................தேட்டம் மரியாதை காணும் மாநிலத்தீர் கேண்மின் தரியாது காண்நும் தனம். | | | | நன்னெறி | : | பொன்னணியும் வேந்தர்..........................காணுங்கண் மதியொக்குமோ காண். |
சுப் உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் கூறும் பொருள் ஒன்றே. தெய்வச்சிலையார் கூறுவது வேறு. சூத்திரத்தில் அசைக்கும் என்பதற்குப் பிரதியாக இசைக்கும் என்பது அவரது பாடமாதலின் அவ்வாறு கூறின ரெனினும், ‘கேட்டை யென்றா’ (30) என்ற மேற்சூத்திரத்தில் முன்னுறக்கிளந்த இயல்பாகும்மே’ என்பதற்கு அசைநிலையாகும் என்று அவரே பொருள் கூறுதலின் உரையாசிரியர் முதலியோரின் கொள்கையே தக்கது. அவ்வாறாயின் தெய்வச்சிலையார் காட்டிய “படையிடுவான் மற்கண்டீர் காமன்மடையடும் பாலொடு கோட்டம்புகின்” என்ற உதாரணத்தில் கண்டீர் என்பது அசைநிலை என்பது என்றாற் பெறப்படும் எனின், ‘செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் (சொல். 463) என்ற புறநடைச் சூத்திரத்தான் என்க. 420. | கேட்டை யென்றா நின்றை யென்றா | | காத்தை யென்றா கண்டை யென்றா வன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. (30) |
|