பக்கம் எண் :

அசை நிலையடுக்கு சூ. 30219

 
 (கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே.)

ஆ. மொ. இல.

‘Kettai’, ‘ninrai’ and ‘Kandai’ - all these -
are to be expletives except in the second
person.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை முன்னைய நான்கும்போல வினாவொடு படாது வாளாதே நின்றுழி இவையும் அசைச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து.

1முன்னின்றவற்று நிலைமையல்வழி யென்பார் ‘முன்னிலையல் வழி’ என்றார் என்பது.

வ-று : கேட்டை கேட்டை, நின்றை நின்றை, காத்தை காத்தை, கண்டை கண்டை எனவரும். இவையும் 2கட்டுரைக்கண் வருமிடம் அறிந்து கொள்க.

இனி, இவை வினாவொடு பட்டுழியாயக்கால் அசை நிலை யாகா என்பது.

சேனா

இ-ள் : கேட்டை எனவும், நின்றை எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் நான்கும் 1முன்னிலை யல்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசைநிலையாம், எ-று.


1. முன்சூத்திரத்தில் (29ல்) நின்ற கண்டீர் முதலியவற்றின் நிலைமை யல்லாதவழி என்றது வினாவொடு கூடாதவழி என்பது.

2. கட்டுரை - உரையாடல்.

1. கேட்டை முதலாயின முன்னிலை யாயின் வினைச்சொற்களாம்; அசை நிலையாயின் இடைச் சொற்களாம் என்பது சேனா. கருத்து.