பக்கம் எண் :

அசை நிலையடுக்கு சூ. 30221

தெய்

இதுவும் அது.

இ-ள் : இந்நான்கு சொல்லும் முன்னிலை வினைச் சொல்லல் வழி அசைநிலையாகும், எ-று.

உ-ம் : 1“மோரொடு வந்தா டகை கண்டை யாரொடுஞ் சொல்லி யானன்றே வனப்பு” என்றவழிக் கண்டை என்பது அசைநிலையாயிற்று. ஏனையவும் வந்தவழிக் கண்டு கொள்க.

நச்

இதுவும் அது.

இ-ள் : கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் - கேட்டை எனவும் நின்றை எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும், முன்னிலை அல்வழி - முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால், முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே-மேற் சொல்லப்பட்ட அசைநிலையாம், எ.று.

இவையும் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து, ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய. இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க.

வெள்

இதுவும் அது.

இ-ள் : கேட்டை எனவும் நின்றை எனவும் காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அந்நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாதவழி மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம், எ-று.

இவையும் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்றவழி அசைநிலையாய் வருமாறு வழக்கிற்


1. பொருள் :