பக்கம் எண் :

222தொல்காப்பியம்-உரைவளம்

கண்டு கொள்க. நின்றை காத்தை என்பன இக்காலத்துப் பயின்று வாரா என்பர் சேனாவரையர். முன்னர்க் கூறப்பட்ட ‘கண்டீரே’ முதலியன வினாவிற்கு அடையாக அடுக்கி வந்த வழி முன்னிலை யசைநிலையே யாமன்றி வினைச்சொல்லாதல் இல்லை. இச்சூத்திரத்திற் கூறப்பட்ட கண்டை முதலியன அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாகியும் அசை நிலையாகியும் வருவன ஆதலின் அந்நிலைமை நீக்குதற்கு ‘முன்னிலையல்வழி’ என்றார் ஆசிரியர்.

ஆதி

* கேட்டை நின்றை காத்தை கண்டை இவை போன்றவை முன்னிலையுடன் அன்றிப் பிற இடங்களில் வருமாயின் முன் உரைத்தபடி அசைநிலையாகவே கொள்க.

கேட்டனை, நின்றனை, காத்தனை, கண்டனை-இவற்றின் இலக்கிய வடிவம் முந்திய நான்கும். இவை ‘நீ கேட்டனை’ என்ற முறையில் செய்தி அறிவிப்பின் முன்னிலை வினைமுற்றாம். இன்றேல் அசைநிலையாம்.

கேட்டாய் கேட்டாய் நன்றாய்க் கேட்டு வந்து விட்டாயே - அசைநிலை.
நின்றாய் நின்றாய் நின்று என்ன பயன் - அசைநிலை.
காத்தை காத்தை களவு போம்படிக் காத்தாய்-அசைநிலை.
படித்தான் புத்தகத்தைத் திறக்காமல் படித்தான்.

இவ்வாறு நேர் பொருளின்றிக் குறிப்பு முறையில் நிற்பவை அசைநிலை. வந்து விட்டான்; எல்லோரும் போனபிறகு ஏன் வரவேண்டும்? - அசைநிலை.


* இவர் கூறும் உரை ஆய்வுக்குரியது. காட்டிய உதாரணங்கள் பொருந்துமாறில்லை.