வினை முற்றுகளின் வகை சூ. 31 | 223 |
வினை முற்றுகளின் வகை 421. | இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் | | சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மு விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு *மிவ்விரண் டாகு மவ்வா றென்பு முற்றியன் மொழியே (31) | | | | (இறப்பி நிகழ்வின் எதிர்வின் என்று அச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம் மூவிடத்தான் வினையினும் குறிப்பினும் மெய்ம்மை யானும் இவ்விரண்டு ஆகும் அவ் ஆறு என்ப முற்றுஇயல் மொழியே) |
ஆ. மொ. இல. Past, present and future-these three tenses of distinctive nature in three Persons, first, second and third of tense denoting verb and appellative verb each in two, the finite verbs are said to be six. பி. இ. நூ வீர. 71, 72 ஒருவன் ஒருத்தி சிறப்புப் பலரொன்றொடு பலவை மருவு படர்க்கையொடு காலம் மூன்றையும் வைத்துறழத் துருவமலி பதினெட்டாம் தொழில்பதம் தொல்கருத்தா உருவ மலியும் பொருள்மேல் நிகழும் ஒளியிழையே.
* ஈரிரண்டாகும் நச்-தெய்-பாடம். |