பக்கம் எண் :

224தொல்காப்பியம்-உரைவளம்

முன்னிலை தன்மை யிடத்தினில் காலங்கள் மூன்றையும் வைத்
துன்னும் ஒருமை சிறப்பொடு பன்மையும் உய்த்துறழ்ந்தால்
பன்னுந் தொழிற்சொல் பதினெட்டுள கருத்தாப் பொருள் மேல்
மன்னி நிகழ்தொகை முப்பதொ டாறும் வகுத்தறியே.

நன் 224

ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்தும்
ஒருமை பன்மையைத் தன்மை முன்னிலையினும்
முக்காலத்தினும் முரண முறையே
மூவைந் திருமூன்றாறாய் முற்று
வினைப்பதம் ஒன்றே மூவொன் பானாம்.

இல. வி. 232  ௸  ௸   ௸

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், வினையியலுள் ஓதப்பட்டன சில சொற்கள் முற்றுச்சொல் என்னும் குறியெய்துதல் நுதலிற்று.

* அதனாற் பயந்தது என்னையெனின், அச்சொற்கு முன்பு முடிபு கூறி ஈண்டுக் 1குறியிட்டான் என்பது பயன் என்பது.

இதன் பொழிப்பு : இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் மூன்று காலமும் உடையவாய்த் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும் வினையும் வினைக்குறிப்பும் பற்றி அம்மூன்றிடங்கள் தோறும் வினையும் வினைக்குறிப்பும் என இரண்டாம் அவ்வாறு கூற்றுச் சொற்களை முற்றுச் சொல் என்று கூறுப ஆசிரியர், எ-று.


* இக்கருத்தைச் சேனாவரையர் மறுப்பர். நச்சினார்க்கினியர் ஏற்பர்.

1 குறியிட்டான் - பெயரிட்டான்.