வினை முற்றுகளின் வகை சூ. 31 | 225 |
‘அவ்வாறு’ என்றது தன்மை 2யிரண்டு பகுப்பவாயும், முன்னிலை இரண்டு பகுப்பவாயும், படர்க்கை இரண்டு பகுப்பவாயும் வருதல் நோக்கி என்பது. வ-று : உண்டேன், கரியென், எனவும்; உண்டாய், கரியை எனவும், உண்டான், கரியன் எனவும் வரும். பிறவும் அன்ன. முற்றுச்சொல் என்றது செய்கையும் பாலும் செயப்படுபொருளும் தோன்றி நிற்றலின் முற்றுச் சொல் 3என்பாரும், மற்றோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலின் முற்றுச்சொல் 4என்பாரும், எக்கால் அவை தம் எச்சம் பெற்று நின்றன அக்கால் பின்யாதும் நோக்காவாய்ச் செப்பு மூயிற்றுப்போல அமைந்து மாறுதலின் முற்றுச் சொல் 5என்பாரும் என 6இரு பகுதியர் ஆசிரியர் என்பது. சேனா இ-ள் : முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலமும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தும்; உயர்திணையும் அஃறிணையும் இருதிணைப் பொதுவுமாகிய பொருள்தோறும் வினையானும் குறிப்பானும், இவ்விரண்டாய்வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. உ-ம் : சென்றனென், கரியென் எனவும்; சென்றது, கரிது எனவும்; சென்றனை, கரியை எனவும் வரும்.
2. இரண்டுபகுப்பு-தெரிநிலை வினை குறிப்புவினை. 3. தெய்வச்சிலையார் (பிற்காலத்தவர்). 4. சேனாவரையர். 5. நச்சினார்க்கினியர். இளம் பூரணர் மூவர்கருத்தையும் ஏற்பர். 6. இருபகுதியர் என்பது மூன்று பகுதியினர் என்றிருத்தல் வேண்டும். |