பக்கம் எண் :

226தொல்காப்பியம்-உரைவளம்

1இடம் உணர்த்தலும் திணையும் பாலும் விளக்கலும் போல ஒரு சாரனவற்றிற்கே யாகாது எல்லா முற்றுச் சொற்கும் காலம் முற்சிறத்தலின், ‘சிறப்புடை மரபின் அம்முக்காலமும்’ என்றார்.

2வினையினும் குறிப்பினும் என்புழி ஓரீற்றவாகிய வினையும் வினைக்குறிப்புமே கொள்ளப்படும், இவ்விரண்டாதற்கு ஏற்பன அவையாகலான்.

மெய்ம்மையாவது பொருண்மை.

உயர்திணையும் அஃறிணையும் அல்லது இருதிணைப் பொது என்பதோர் பொருள் இல்லையாயினும், சென்றனை, கரியை என்பன செலவிற்கு வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம் பற்றி இருதிணைக்கண்ணும் சேறலின், அந்நிமித்தம் இருதிணைப் பொது எனப்பட்டது.

வினையினுங் குறிப்பினும் இவ்விரண்டாய் வருதலாவது தெரிநிலைவினையாற் றெற்றெனத் தோன்றலும் குறிப்பு வினையாற் றெற்றெனத் தோன்றாமையுமாம்.

முற்றி நிற்றல் முற்றுச்சொற்கு இலக்கணமாதல் ‘முற்றியல் மொழியே’ என்பதனாற் பெற்றாம். 1முற்றி நிற்றலாவது இது


1. இடம் மட்டும் உணர்த்துவன தன்மை முன்னிலை வினைமுற்றுகள். திணைபால் விளங்குவது படர்க்கை வினைமுற்று.

2. உண்டான், கரியன் என னகரவீறே தெரிநிலைக்கும் குறிப்புக்கும் வந்தவாறு காண்க. பிற பால்களுக்கும் இடங்களுக்கும் கொள்க.

1. பிறிதோர் சொல்லோ டியைாது தாமே தொடராதற்கேற்கும் வினைச்சொல் முற்றாம்; பிறிதோர் சொற்பற்றியல்லது நிற்றலாற்றா வினைச்சொல் எச்சமாம். (வினையியல் 35) இதன் தடைவிடை அச்சூத்திரவுரையிற் காண்க.