பக்கம் எண் :

வினை முற்றுகளின் வகை சூ. 31227

என்பது வினையியலுட் கூறினாம் (38). திணையும் பாலும் இடமும் விளக்கல் எல்லா முற்றிற்கும் இன்மையான் இலக்கணமன்மையறிக.

2 உயர்தினை அஃறிணை விரவு என்னும் பொருள் மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல் பற்றி ‘அவ்வாறென்ப’ என்றார். காலமும் இடமும் முதலாயினவற்றோடு கூட்டிப் பகுப்பப் பலவாம்.

3ஊரானோர் தேவகுலம் என்றாற்போல மெய்ம்மையானும் என்புழி ‘ஆன்’ என்பது ‘தொறும்’ என்பதன் பொருட்டாய் நின்றது.

முன்னர்ப் ‘பிரிநிலை’ வினையே பெயரே (சொல் 480) என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமும் கூறுபவாகலின், அவற்றோடியைய முற்றுச் சொல்லையும் ஈண்டுக் கூறினார். கூறவே, முற்றுச் சொல்லும் பெயரெச்சமும் வினையெச்சமும் வினைச்சொல் மூவகைத்தாதல் இனிது உணரப்படும் என்பது.

4உரையாசிரியர் வினையியலுள் ஓதப்பட்டன சில வினைச்சொற்கு முற்றுச்சொல் என்று குறியிடுதல் நுதலிற்று. இச்


2. இளம் பூரணர் மூவிடத்தும் தெரிநிலை குறிப்பு வருதலின் ஆறு எனக்கொண்டார். அதுவே சிறக்கும்.

3. ஊரான் ஓர் தேவகுலம்-ஊர்தோறும் ஓர் கோயில். மூவிடத்தான் என்பது மூவிடந்தோறும் என்னும் பொருளது.

4. ‘அவ்வாறு என்ப முற்றியல்மொழி’ என்னுந் தொடர் முற்றியல்மொழி ஆறு வகைப்படும் என்பர் என்ற கருந்துடையது. அதனால் வகைப்பாடு கூறுதல் இச்சூத்திரத்தின் நோக்கமாம். முற்று எனப்பெயரிடுதல் நோக்கமாயின் ‘அவ்வாறும் முற்றியல் மொழி’ என்று கூறியிருப்பார் ஆசிரியர். என்ப என்னும் சொல் அவ்வாறு என்பதுடன் சேர்த்துக்கூறப்படலின் வகை