சூத்திரம் என்றாரால் எனின், குறியீடு கருத்தாயின், ‘அவ்வாறென்ப முற்றியன் மொழி’ என்னாது ‘அவ்வாறு முற்றியன் மொழி’ எனல் வேண்டும் ஆகலான், அது போலியுரை யென்க. ‘முற்றியன் மொழியேயவ்வாறென்ப என மொழிமாற்றவே குறியீடாம் எனின், குறியீடு ஆட்சிப் பொருட்டாகலின் அக்குறியான் அதனை யாளாமையான், மொழிமாற்றி யிடர்ப்படுவ தென்னையோ வென்பது. அல்லதூஉம் முற்றியன் மொழியெனக் குறியிட்டாராயின், அவை பெயரெஞ்சு கிளவி எனவும், இவை வினையெஞ்சு கிளவி எனவும் குறியிடல் வேண்டும். அவ்வாறு குறியிடாமையானும் அது கருத்தன்றாம். அதனான் வினைச்சொல்லுள் இருவகையெச்சம் ஒழித்து ஒழிந்த சொல் முற்றி நிற்கும் என்றும், அவை இனைத்துப் பாகுபடும் என்றும் உணர்த்தல் இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க. தெய் (இச்சூத்திரத்தையும் அடுத்துவரும் இரண்டு சூத்திரங்களையும் வினையியல் இறுதியில் வைத்து உரையெழுதினார்
4. கூறுதலே நோக்கமாம். சூத்திரம் செய்யுளாதலின் என்ப என்பதை ‘அவ்வாறு முற்றியல் மொழி என்ப’ எனக்கூட்டினால் அவ்வாறும் முற்றுச்சொல் என்பர் எனப்பொருள்பட்டுக் குறியிடுதல் நோக்கமாம் எனக் கொள்ளலாமே. என்பது வினா. விடை : குறியிடுதல் ஆளுவதற்காக. ஆசிரியர் வேறெங்கும் முற்று என ஆளவில்லை. அதனால் என்ப என்பதை மொழி மாற்றாகக் கொள்ள வேண்டுவதில்லை. முற்றியல் மொழி எனப்பெயரிட்டதாகக் கொள்ளின் அது போல வினையெச்சத்துக்கு வினையெஞ்சுகிளவி எனவும் பெயரெச்சத்திற்குப் பெயரெஞ்சு கிளவி எனவும் பெயரிட வேண்டும். அவ்வாறு பெயரிடவில்லை அதனால் இங்கும் முற்றியல் மொழி எனப் பெயரிட்டதாகக் கொள்ள வேண்டுவதில்லை. அதனால் இச்சூத்திரம் நீங்க மற்றையன முற்றி நிற்கும் என்றும் அவை அறு வகைப்படும் என்றும் உணர்த்துவதே. |