வினை முற்றுகளின் வகை சூ. 31 | 229 |
தெய்வச்சிலையார், உரை, வினையியல் உரைவள இறுதியில் காண்க). நச் இது வினைச் சொற்களுள் ஒரு சாரனவற்றிற்கு ஆட்சி வேண்டியதன் குணம் காரணமாகக்கொண்டு ஓர் குறியிடுதல் கூறுகின்றது. இ-ள் : தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்தான்-தன்மை முன்னிலை படர்க்கை என்று சொல்லப்பட்ட அம்மூன்றிடத்தின் கண்ணும் வரும், மெய்ம்மையானும்-உயர்திணை அஃறிணை விரவுத்திணை யென்னும் மூவகைப் பொருள்தோறும், வினையினும் குறிப்பினும் ஈரிரண்டாகும் என்ற அவ்வாறு மொழி-தெரிநிலை வினையானும் குறிப்பு வினையானும் இவ்விரண்டாய் வரும் என்று யான் முற்கூறிய அவ்வாறு வகைச் சொல்லை, இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற சிறப்பு உடை மரபின் அம் முக்காலமும் இயல் முற்று என்ப-இறப்பு ஒன்றானும் நிகழும் சிறப்புடை மரபானும் நிகழ்வு ஒன்றானும் நிகழும் சிறப்புடை மரபானும் எதிர்வு ஒன்றானும் நிகழும் சிறப்புடை மரபானும் அம்முக்காலத்தும் நிகழும் சிறப்புடை மரபானும் இயலும் முற்றுச்சொல் என்று பெயர் கூறுவர் ஆசிரியர், எ-று. ‘அம்’ ‘ஆம்’ என்னும் சூத்திரம் (வினை. 5) முதலாகப் ‘பல்லோர் படர்க்கை’ (வினை-80) என்னும் சூத்திரம் இறுதியாக 1மூவகை யிடமும் 2 மூவகைப் பொருளும் 3இருவகை வினையும் எடுத்து ஓதியவற்றை ஈண்டும் ஓதியது ‘அனுவாதம்
1. மூவகையிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை 2. மூவகைப் பொருள் - உயர்திணை அஃறிணை பொதுத்திணைப் பொருள்கள். 3. இருவகை வினை - தெரிநிலை, குறிப்பு வினைகள் 4. மீண்டும் கூறுதல். |