ஆயிற்று. ஆண்டு ஓதாது எஞ்சி நின்ற காலமும் 5குறியீடும் ஈண்டு ஓதியது இலக்கணமாயிற்று. முன்னர்க் ‘குறிப்பினும்-வினையினும் (வினை. 4) என்னும் சூத்திரத்தில் ‘காலமொடு வரூஉம் வினைச் சொல் எல்லாம்’ என்றது 6மூவகை வினைக்கும் பொதுவாய் நின்று 7ஒரோவோர் முற்று வினையும் முக்காலமும் பெற்றே வரும் என்னும் ஐயம் நிகழ்த்திற்றதனை ஒரோவோர் காலம் பெற்று வருவனவும் முக்காலமும் பெற்று வருவனவுமாய் நிற்கும் முற்று என ஐயம் அகற்றினார் இச்சூத்திரத்தான். எச்சங்கட்கு மேனிற் சூத்திரத்தான் ஐயம் அகற்றுப. மேல் ‘பிரிநிலை வினை’ (எச். 84) என்னும் சூத்திரத்தான் எச்சங்கட்குக் குறியீடு கூறுகின்றார். ஆதலின் அதற்கு ஏற்ப முற்றிற்கும் குறியீடு கூறினார். இனி, அவை காலத்தொடு வருங்கால், றகர உகரம் இறந்த காலத்தாற் சிறந்தது. 8உம் மொடு வரூஉம் கடதறவும், 9கடதற என்னும் அந்நான்கு ஊர்ந்த குன்றியலுகரமும், அல்லும், பகரமும், ஆரும், ஆவும் வவ்வும் ஆகிய பதின் மூன்றும் எதிர் காலத்தாற் சிறந்தன. அம், ஆம், எம், ஏம், என், ஏனும்; அன் ஆனும்; அள், ஆளும்; அர், ஆரும்; அகரமும், 10தகர உகரமுமாகிய பதினான்கும் முக்காலத்தாற் சிறந்தன. முற்று இருபத்தொன்பதின்கண் 11டகர உகரம் வினைக்குறிப்பு ஆதலின், அதுவும் முக்காலத்தாற் சிறந்ததாம். ஆகத்தெரிநிலை முற்று இருபத்தெட்டும் காண்க.
5. குறியீடு-முற்று எனப் பெயரிடுதல் 6. மூவகை வினை-பெயரெச்ச வினை, வினையெச்சவினை முற்று வினை. 7. ஒரோவோர் முற்றுவினை-ஒவ்வொரு முற்று வினையும். 8. உம்மொடு..............கடதற = கும், டும், தும், றும். 9. கடதற.....................குற்றியலுகரம் = கு, டு, து, று. 10. தகரவுகரம் - து 11. டகரவுகரம் - டு |