வினை முற்றுகளின் வகை சூ. 31 | 231 |
யார், எவன் என்பனவோனின், அவையும் முப்பாற்கும் இருபாற்கும் பொதுவாகி இடம் உணர்த்தாவேனும் வினைக்குறிப்பு ஆகலின் முக்காலமும் உடைய என்று உணர்க. இரு திணைக்கும் ஓதிய குறிப்பு வினை பதினெட்டும் முக்காலமும் உடைய. இனி, பொருள் உணர்தத்ாது இடம் உணர்த்தும் முன்னிலையும் வியங்கோளுமாகிய விரவு வினைமுற்றுக்களும் இடமும் பொருளும் உணர்த்தா. விரவு வினை முற்றுக்களும் 12பிரிவு வேறு படூஉம் செய்தியவாய் நிற்றலின், இடமும் பொருளும் உணர்த்திக் காலம் கொண்டே நிற்கும் என்று உணர்க. இனி ஐயும் ஆயும் இருவும் ஈரும் முக்காலத்தாற் சிறந்தன. இகரமும், இன்னும், வியங்கோளும், செய்ம்மனவும் எதிர்காலத்தாற் சிறந்தன. செய்யும் என்பது நிகழ்காலத்தாற் சிறந்தது. இன்மை செப்பலும், வேறு என் கிளவியும் வினைக் குறிப்பு ஆதலின் முக்காலத்தாற் சிறந்தன. இனி விரவு வினையுள் வினையெச்சமும் பெயரெச்சமும் மேல் கூறுதும். இவை ஈரிரண்டு ஆங்கால் ஓர் ஈற்றின் கண்ணே கொள்க. உ-ம் : சென்றனன் கரியன் எனவும்; சென்றது, கரிது எனவும்; சென்றனை, கரியை எனவும் வரும். ஈண்டுக் காலமும் குறியீடும் கூறினாரேனும் ‘வந்தது கொண்டு வாராதது உணர்த்தல்’ என்னும் உத்திபற்றி வினையியலுள் காலமும் குறியீடும் விரித்து ஆசிரியர் எல்லாரும்,
12. பிரிவு வேறுபடூஉம் செய்தி - ஒருதிணையினின்றும் பிரிந்து வேறு திணைக்குரியவாதல். சாத்தா செல் என்றால் சாத்தன் என்னும் விரவுப் பெயர் ஆடவனைக் குறிப்பின் அஃறிணையினின்றும் பிரிந்து வேறுபடுதலும், மாட்டைக் குறிப்பின் உயர்திணையினின்றும் பிரிந்து வேறுபடுதலும் காண்க. |