13உரையும் காண்டிகையும் கூறினார் என்று உணர்க. இவை முற்றிநிற்குமாறு ‘அவற்றொடு வருவழி’ (வினை. 38) என்னும் சூத்திரத்துள் கூறினார்’. ‘மெய்ம்மையானும் என்றது ‘ஊரானோர் தேவகுலம்’ என்றாற்போலத் ‘தொறு’ என்பதன் பொருட்டாய் நின்றது. இச்சூத்திரத்திற் கூறியன எல்லாம் முற்றப் பெறுவனவும் குறையப் பெறுவனவும் வினையியலுள் விரித்து ஓதிய வாற்றான் உணர்க. வெள் இது முற்றுச் சொற்களின் இலக்கணமும் அவற்றின் பாகுபாடும் உணர்த்துகின்றது. இ-ள் : இறந்த காலம் எதிர் காலம் நிகழ்காலம் என்னும் சிறப்புடைய இயல்பினவாகிய அம் மூன்று காலமும் உடையவாயத் தன்மை முன்னிலை படர்க்கை என்னும்அம்மூவிடத்தும் உயர்திணையும் அஃறிணையும் இருதிணைப் பொதுவுமாகிய பொருள் தோறும் வினையும் வினைக் குறிப்பும் என இவ்விரண்டாய் வரும் அவ்வறு கூற்றுச் சொற்களையும் முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர், எ-று. மூவிடத்தும் வினையும் குறிப்பும் பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. உ-ம் : உண்டேன், கரியேன் எனவும்; உண்டாய் கரியை எனவும், உண்டான், கரியன் எனவும் வினைச் சொற்கள் மூவிடத்தும் வினையும் வினைக்குறிப்பும் என இவ்விரண்டாய் ஆறாய் வந்தன. இடமும் திணையும் பாலும் விளக்குதல் ஒருசார் வினைச்சொற்கே உரியவாதல் போலாது காலம் உணர்த்துதல் எல்லா முற்றுச் சொற்கும் முன்னர்ச் சிறத்தலின் ‘சிறப்புடை மரபின் அம்முக்காலமும் என்றார். வினையினும் குறிப்பினும் இவ்
13. உரை - விருத்தியுரை |