வினை முற்றுகளின் வகை சூ. 31 | 233 |
விரண்டாய் வருதலாவது, தெரிநிலை வினையால் தெளிவாகக் காலந் தோன்றுதலும் குறிப்பு வினையால் அவ்வாறு காலந்தெளியத் தோன்றாமையும் ஆகிய இருதிறத்தவாய் வருதல். மெய்ம்மையானும்-பொருள்தோறும்; உயர்திணை அஃறிணை விரவுத்திணை என்னும் மூவகைப் பொருள்தோறும். ஆன் உருபு தொறுப் பொருளில் வந்தது. முற்றி நிற்றல் முற்றுச்சொற்கு இலக்கணமாதல் ‘முற்றியன் மொழியே’ என்பதனாற்புலனாம். ஆதி இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என மரபாக வருங்காலம் மூன்று. தன்மை முன்னிலை படர்க்கை என இடம் மூன்று. இவற்றுக்குத் தெரிநிலை வினை குறிப்பு வினை முற்றின் இயல்பு முப்பத்தாறாகும். மூவிடம் | இறந்த காலம் | நிகழ் காலம் | எதிர் காலம் | மொத்தம் | | | | | | | | தன்மையொருமை | ” | ” | ” | 3 | | 6 | தன்மைப்பன்மை | ” | ” | ” | 3 | | | | | | | | முன்னிலையொருமை | ” | ” | ” | 3 | | 6 | முன்னிலைப்பன்மை | ” | ” | ” | 3 | | | | | | | | படர்க்கையொருமை | ” | ” | ” | 3 | | 6 | படர்க்கைப்பன்மை | ” | ” | ” | 3 | | | | | -- | | | | | ஆகத்தெரிநிலைவினை | | 18 | | | | | இவ்வாறேகுறிப்புவினை | | 18 | | | | | | | -- | | | ஆக மொத்த வினைமுற்று வகை | | 36 | | | | | | | -- | | |
உரையாசிரியர்கள் இங்கு முறைதவறி ஏதேதோ எழுதுகிறார்கள். அவர்கள் அவ்வாறு எழுதக் காரணம் ஈற்றடியின் ‘அவ்வாறென்ப’ என்பதற்கு ‘அவ் ஆறுவகை என்ப’ எனப் பொருள் கூறுகின்றனர். அது தவறு அவ்வாறு-ஆறு ஆறு. ஆ + ஆறு = அவ் வாறு. எவ் வாறு என விளக்குதும். |