பக்கம் எண் :

234தொல்காப்பியம்-உரைவளம்

குற்றயிலுகரப் புணரியல்       (64)
ஆறன் மருங்கின் குற்றிய லுகரம்

ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும். ஆறு-று உகரமும் ற் மெய்யும் கெட்டு ஆ+ஆறு ஆகிறது. குற்றியலுகரப் புணரியல் (35) ‘மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்’ என்ற விதிப்படி ‘ஆ’ குறுகி அ+ஆறு= அவ் வாறு ஆயிற்று. அதன் பொருள் 6 x 6 = 36.

நன்னூலார் இதனைத் தெளிவாக அறிவிக்கின்றார். (சூ. 199) ‘ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரண்டின், முன்னதின் முன்னலவோட, உயிர்வரின் வவ்வும் மெய்வரின் வந்ததும் மிகல்நெறி’ என்று விதித்தார். நிலைமொழி முதல் குறுகும் என்பதை “எண்ணிறை...மூன்று ஆறு ஏழ் குறுகும்” (188) என விதித்தார்.

இதனைக் கருத்துட் கொள்ளாமல் உரையாசிரியர்கள் எச்சவியல் 16, 21 காட்டும் அவ் வாறு போல இதனையும் எண்ணித் தம் பிறழ் உணர்ச்சிக்கு ஏற்பப் பொருளையும் திரித்து விட்டார்கள்.

ஆசிரியர் இங்கு வினைமுற்று வகைக்கு வரம்பு காட்டுகிறார். ஆதலின், உரையாசிரியர்கள் கருத்து பொருத்தமற்றது.

சுப்

பொருள் : இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் மூன்றுகாலமும் உடையவாய்த் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும் வினையும் வினைக்குறிப்பும் பற்றி, அம்மூன்றிடங்கள்தோறும் வினையும் வினைக்குறிப்பும் என இரண்டாம்; அவ்வறு கூற்றுச் சொற்களை முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர், எ-று.

......................................................

சூத்திரத்தில் ‘மெய்மை’ என்பதும் வினையையும் வினைக்குறிப்பையும் குறிக்கின்றது என்ம் உரையாசிரியரும்; உயர்திணை அஃறிணை விரவுத்திணை இம்மூன்றனையும் குறிக்கின்றது என்று சேனாவரையரும் நச்சினார்க்கினியரும்; ஒருமை பன்மை இவற்றைக் குறிக்கின்றது என்று தெய்வச்சிலையாரும் கூறினர்.