வினை முற்றுகளின் வகை சூ. 31 | 235 |
ஈரிரண்டாகும் அவ்வாறு என்பதற்கு இருபத்துநான்கு என்று தெய்வச்சிலையார் கொள்ளும் பொருள் பொருத்தமுடைத்து. மேலும் ‘பிரிநிலை வினையே....................ஆயீரைந்து’ (சொல். 480) என்ற சூத்திரம் எஞ்சு பொருட்கிளவி பத்து வகைப்படும் எனத் தொகுத்துக் கூறியவாறு, இச்சூத்திரம் முற்றுவினை இருபத்துநான்கு வகைப்படும் எனத் தொகுத்துக் கூறிற்று என்னலாம். ............................................. சேனாவரையர் இங்கு, “வினைச் சொல்லுள் இருவகை எச்சம் ஒழித்து ஒழிந்த சொல் முற்றி நிற்கும் என்றும், அவை இனைத்துப் பாகுபடும் என்றும் உணர்த்தல் இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க” என்றாரேனும், முன்பு “முற்றி நிற்றல் முற்றுச் சொற்கு இலக்கணமாதல் ‘முற்றியன் மொழியே’ என்றதனால் பெற்றாம்” என்று கூறினமையான், ‘அவை இனைத்துப் பாகுபடும் என்று உணர்த்தல் இச்சூத்திரத்தில் விதேயமாகும் என்பதே’ அவர் கருத்தாகும். நச்சினார்க்கினியர், “காலமும் குறியீடும் ஈண்டு ஓதியது இலக்கணமாயிற்று’ என்று கூறி, ஒரோவோர்காலம் பெற்று வருவனவும் முக்காலமும் பெற்று வருவனவுமாய் நிற்கும் முற்று என ஐயம் மகற்றினார் இச்சூத்திரத்தான்” என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணுகின்றது. ஐயம் எதனால் அகற்றப் பட்டது? இது இனைத்துப் பாகுபடும் என்றதனால் அன்றோ? ஆதலின் இனைத்துப் பாகுபடும் என்று கூறுவதே இச்சூத்திரத்திற்குப் பயன் என்று அவர் கூறல் வேண்டும். 422. | எவ்வயின் வினையும் *அவ்விய னிலையும் (32) | | | | (எவ்வயின் வினையும் அவ் இயல் நிலையும்). |
ஆ. மொ. இல. All kinds of verbs (other than those mentioned above) stand in the same position.
* அவ்வயின் - நச் - பாடம். |