பக்கம் எண் :

236தொல்காப்பியம்-உரைவளம்

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது முற்றுச்சொல் ஒழித்து ஒழிந்த பெயரெச்ச வினையெச்சங்கட்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

உரை : மேற் கூறப்பட்ட முற்றுச்சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் மூன்று காலமும் மூன்றிடமும் உடையவாய் வினையும் வினைக் குறிப்பும் பற்றி வரும் என்பான், ‘எவ்வயின் வினையும் அவ்வயில் நிலையும் என்றான் என்பது, மற்று,

வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்       (வினை. 1)

என்புழி எல்லா வினைச் சொல்லும் மூன்று காலத்திற்கும் உரிய எனப்பட்டது. இனி

“எஞ்சிய கிளவி யிடத்தொடு இவணி
ஐம்பாற்கும் உரிய”       (வினை. 26)

என்புழி எவ்விடத்திற்கும் உரிமையும் கூறப்பட்டது பிறவெனின், மேல் அங்ஙனம் கூறினாரேனும் அது விலக்குப்பட்டது; ஈண்டுப் போதந்து முற்றுச் சொல்லையே விதந்து மூன்றிடத்திற்கும் உரிய என்றமையான். அது நோக்கி ஈண்டு இது கூறினார் என்பது.

சேனா

இ-ள் : மூவிடத்தாற் பொருடோறும் இவ்விரண்டாமென மேற்சொல்லப்பட்ட கட்டளையுட் பட் டடங்காது பிறாண்டு வரும் வினையும் முற்றியல்பாய் நிலையும், எ-று.

யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தாமையின், மேற்கூறிய கட்டளையின் அடங்காது பிறாண்டு