வினை முற்றுகளின் வகை சூ. 32 | 237 |
வந்தனவாம். * சிறப்பீற்றான் வரும் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் பொருள்தோறும் வினையும் வினைக்குறிப்புமாய் வருதற்கு எய்தாமையின் ‘மெய்ம்மையானும் இவ்விரண்டாகும்’ (வினை. 31) கட்டளையுட்படாது பிறாண்டு வந்தனவாம். 1குறிப்பு குறிப்பு வினைக் கீறாகாது தெரிநிலை வினைக் கீறாவனவும் 2தெரிநிலை வினைக் கீறாகாது குறிப்பு வினைக் கீறாவனவும் சிறப்பீற்றவாம். அவை வினையியலுட் கூறிப்போந்தாம். யார் எவன் என்பன பாலும், இல்லை வேறு என்பன திணையும் பாலும் உணர்த்தாவாயினும் மேலைச் சூத்திரத்தான் முற்றுச் சொற்குப் பாலும் திணையும் உணர்த்தல்.
* வினைமுற்றுகள் திணையும் பாலும் உணர்த்தல் முடிபாயின் அவற்றை யுணர்த்தாத முன்னிலையை அவற்றையுணர்த்தும் படர்க்கை தன்மைகளுடன் சேர்த்துக் கூறார் ஆசிரியர். அதனால் ஆசிரியர்க்கு முற்று திணையும் பாலும் உணர்த்தியேயாகவேண்டும் என்னும் கருத்திலை என்பது புலப்படும். 1. கும், டும், தும், றும், கு, டு, து, று எனும் தன்மைப் பன்மை ஒருமை விகுதிகளும், உயர்திணைப் பன்மைக்கு வரும் பகரவிகுதியுமாம். 2. டு என்னும் அஃறிணை யொருமை விகுதியும், எவன் என்னும் அஃறிணை வினாவினைக் குறிப்பின் னகர இறுதியுமாம். எண் 1-ல் உள்ள ஈறுகள் குறிப்புக்கு வாராமையானும், எண் 2ல் உள்ள ஈறுகள் தெரிநிலைக்கு வாராமையானும் எல்லா வினைகளும் உயர்திணை அஃறிணைப் பொருள்கள் தோறும் தெரிநிலையும் குறிப்புமாய் வரும் என்னும் கட்டளையுட்படா என்க. |