பக்கம் எண் :

238தொல்காப்பியம்-உரைவளம்

3ஒருதலையாக எய்தாமையின், 4இடம் உணர்த்தாமையே பற்றி ஈண்டுக் காட்டப்பட்டன. 5திணையும் பாலும் உணர்த்தல் ஒருதலையாயின் ‘தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூவிடத்தான்’ (எச்ச. 31) என ஆசிரியர் முன்னிலையிடம் ஆண்டு வையார் என்பது.

முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்தும் என்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின், அவை இடவேறுபாடு உணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின் அதுபோலியுரையென்க.

இனி ஓருரை : மேலைச் சூத்திரத்தாற் கூறப்பட்ட எப்பொருள் மேலும் வரும் எல்லா வினையும் முற்றுச் சொல்லாய் நிற்கும் என்றவாறு. ஈண்டு வினையென்றது வினைச் சொல்லையாக்கும் 6முதல் நிலையை. எல்லா வினையும் முற்றுச் சொல்லாம் எனவே எச்சமாதல் ஒருதலையன் றென்பதாம். ஆகவே


3. ஒருதலையாக-உறுதியாக, முடிவாக

4. யார், எவன், இல்லை, வேறு என்பன ஈண்டு உதாரணமாகக் காட்டப்பட்டன.

5. படர்க்கை முற்றுத்திணையும் பாலும் உணர்த்தும் தன்மைமுற்று (தன்மை உயர்திணைக்கே யுரியது என்பது ஆசிரியர் கருத்தாதலின்) திணையும் ஒருமை அல்லது பன்மைப்பாலும் உணர்த்தும். முன்னிலை திணையும் பாலுமாகிய இரண்டையுமே யுணர்த்தாது.

6. முதல்நிலை-பகுதி. எல்லாப்பகுதியும் முற்றுச் சொல்லாம் எல்லாப் பகுதியும் எச்சமாகா. கச்சு என்னும் பகுதி கச்சினன் எனக்குறிப்பு முற்றாகும். ஆனால் அது எச்சமாதல் இல்லை. உண் என்னும் பகுதி உண்டான் என முற்றாகவும் உண்டு. உண்ட என எச்சமாகவும் வரூம்.