பக்கம் எண் :

வினை முற்றுகளின் வகை சூ. 32239

வினைச் சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச் சொல்லே என்பதாம். எல்லாவினையும் முற்றுச் சொல் ஆகலும், கச்சினன், கழலினன், நிலத்தன், புறத்தன் என்னுந் தொடக்கத்து வினைக் குறிப்பின் முதல்நிலை எச்சமாய் நில்லாமையும் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. பிறவுமன்ன.

இவையிரண்டும் இச்சூத்திரத்திற்குப் பொருளாகக் கொள்க.

தெய்

(இச்சூத்திரவுரை வினையியல் இறுதியில் எழுதப்பட்டுள்ளது).

நச்

இதுமேலதற்குப் புறனடை.

இ-ள் : எவ்வயின் வினையும்-மூன்றிடத்து வரும் வினையெச்சமும் பெயரெச்சமும், அவ்வயின் நிலையும்-அம்முற்று இயல்பிலே நிற்கும், எ-று.

என்றது இறப்புப்பற்றி வருவனவும், இறப்பும் நிகழ்வும் பற்றி வருவனவும், எதிர்வு பற்றி வருவனவும் முக்காலமும் பற்றி வருவனவும் ஆம் என்றவாறு.

வினையெச்சங்களுள் உகாரமும் ஊகரமும் எனவும் முன்னும் கடையும் இறப்பும், புகரமும் பின்னும் இறப்பும் நிகழ்வும், இயரும் இயவும் இன்னும் குகரமும் எதிர்வும், அகரமும் காலும் வழியும் இடமும் முக்காலமும் பற்றி வந்தவாறும்; பெயரெச்சங்களுள் உம்மீறு நிகழ்வும் எதிரவும், அகரவீறு இறப்பும் பற்றி வந்தவாறும் காண்க.

இருவகை எச்சத்திற்கும், ‘காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்’ (வினை-4) என்ற பொது விதியான், ‘முக்காலமும் ஒன்றற்கு வருமோ’ என்னும் ஐயம் நிகழ்ந்ததனை இச்சூத்திரத்வான் அகற்றினார். ஆசிரியர் அவற்றிற்கு ஓதிய