பக்கம் எண் :

240தொல்காப்பியம்-உரைவளம்

1வாசகங்களான் அவற்றிற்கு உரிய காலங்களும் உணர்த்தினாரால் எனின், அவ்வாசகங்களால் காலம் உணராதவையும் உள ஆகலின் அவையும் விளங்குதற்கு ஈண்டுக் கூறினார் என்று உணர்க.

சேனாவரையர், ‘வினை என்றது முதல் நிலை’ என்று பொருள் உரைத்து, ‘அவையும் முற்றுச் சொற்போல முற்றிநிற்கும்’ என்றாரால் எனின், அம்முதல் நிலை படுத்தல் ஓசையால் பெயர்த்தன்மைப்பட நிற்குமாறும், எடுத்தல் ஓசையால் முன்னிலையேவல் ஒருமை வினை முற்றாய் நிற்குமாறும் ‘இர்ஈர்மின்’ (வினை. 27) என்னும் சூத்திரத்துள் கூறினாம்.

2முற்று இலக்கணம் கூறுதற்கு இடையே இச்சூத்திரத்தான் எச்ச இலக்கணத்தைக் கூறினார், பருந்து விழுக்காடாக மாட்டேறிற்று என்று கருதி.

வெள்

இது மேலதற்கோர் புறனடை.


1. செய்து என்னும் வாசகத்தால் இறந்த காலம் உணரப்பட்டது. செய என்னும் வாசகம் நிகழ்வும் எதிர்வுமாகிய காலத்துக்குரியது. ஆதலின் ஆசிரியர் கூறிய வாசகங்களை (வாய்பாடுகளைக்) கொண்டு காலம் உறுதியாக அறிய இயலாது. எனவே காலம் உணரப்படாத வினைகளும் காலத்தொடு முடிக்கப்படும் என்பது இச்சூத்திரத்தில் கூறப்பட்டதாம் என்க.

2. ‘இறப்பின் நிகழ்வின்’ என்னும் முன் சூத்திரமும் அடுத்து வரும் ‘அவைதாம் தத்தம்’ என்னும் சூத்திரமும் முற்று வினை பற்றியன. இவற்றிடையே எச்சம் பற்றிய இச்சூத்திரம் கூறினார் ஆசிரியர். ஆகாயத்துப் பருந்து நிலத்துப் பொருளைக் கொள்வது போல ஒரு சூத்திரம் தொலைவில் உள்ள சூத்திரத்தைத் தொடுவது பருந்து விழுக்காடாம், இச்சூத்திரம் வினையியலில் உள்ள எச்சம் பற்றிய சூத்திரங்களை நோக்கி நின்றது.