பக்கம் எண் :

வினை முற்றுகளின் வகை சூ. 32241

இ-ள் : தொழிலும் காலமும் இடமும் பாலும் உணர வரும் வினைச்சொல் அன்றி மூன்றிடத்திற்கும் பொதுவாகி வரும் வினைச் சொல்லும் முற்றி நிற்றலாகிய அவ்வியல்பினைப் பெற்று நிற்கும், எ-று.

மேற்குறித்த இடம் காலம் ஆகிய வரையறை யுட்படாது, யார், எவன், இல்லை, வேறு என மூன்றிடத்தும் பொதுவாகி வரும் வினைச் சொல்லும், குறிப்பு வினைக்கு ஈறாகாது தெரிநிலை வினைக்கு ஈறாவனவும், தெரிநிலை வினைக்கு ஈறாகாது குறிப்பு வினைக்கு ஈறாவனவு மாய்ச் சிறப்பீற்றனவாய் முன் வினையியலில் எடுத்தோதப்பட்டனவும் அடங்க ‘எவ்வயின் வினையும்’ என்றார். அவ்வியல் நிலையலாவது முற்கூறிய முற்றுத் தன்மையில் நிற்றல்.

................................................

முற்றுச் சொல்லேயன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்தும் என்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாகவுரைப்பர் இளம்பூரணர். ஈண்டு ‘அவ்வியல் நிலையும்’ என்னும் கட்டு முற்றின் இயல்பினைச் சுட்டி நிற்றலானும் முன்னும் பின்னும் முற்றுச் சொற்களின் இலக்கணங்கூறும் சூத்திரங்களினிடையே அமைந்த இச்சூத்திரத்தில் வரும் வினையென்றது முற்று வினையோ மன்றிப் பெயரெச்ச வினையெச்சங்களாகிய குறைச்சொல்லாதல் ஏலாமையானும், மூவிடத்திற்கும் பொதுவாகிய அவை இடவேறுபாடு உணர்த்தாமையானும் அவ்வுரை ஆசிரியர் கருத்தோடு பொருந்துவதாகத் தோன்றவில்லை.

ஆதி

பால் காட்டுவது, வியங்கோள் இன்னும் பிற எல்லாவகை வினைகளும் இந்த முறைக்குள் அமைவதாகும்.

சுப்

சேனாவரையர் தெய்வச்சிலையார் இவ்விருவரது உரையும் ஒன்றே. அஃதே, பொருத்தம் உடைத்து.