இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல் இலதெனின் மற்றென்சொல் கேனே (குமரகுருபரர்-சிதம்பரச் செய்யுட்கோவை. 54) என்ற பாடலில் இயற்சொல் என்ற கலைச் சொல் திரிசொல்லாகச் செய்யுளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (சொல்லிலக்கணக் கோட்பாடு தொல்காப்பியம் முதற் பகுதி (பக்-84-85) 1984. அனைத்திந்தியத் தமிழ் மொழியியல் கழகம், அண்ணாமலைநகர்) திசைச்சொல் இலக்கணம் 394. | செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந | | தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. (4) | | | | (செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி) |
ஆ. மொ. இல. ‘Thisaiecol’ or the dialectal words are those which are spoken with their meanings unchanged in the twelve divisions of Tamil land where correct Tamil is in use. பி. இ. நூ : நன். 273. செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப இ. வி. 174 ௸ ௸ ௸ முத்து ஓ 52. செந்தமிழ் நிலனைச் சேர்ந்த ஈராறு நிலத்தினும் தங்குறிப்பின திசைக்கிளவி. |