இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்தமுறையானே திசை்சொல் இவையென இலக்கணத்தாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை : செந்தமிழ் நாட்டை 1அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார்தம் குறிப்பினையே இலக்கணமாகவுடைய திசைச்சொற் கிளவிகள். எ-று. வரலாறு : | தாயைத் ‘தள்ளை’ என்ப குடநாட்டார் | | நாயை ‘ஞமலி’ என்ப பூழிநாட்டார். பிறவும் | | அன்ன. |
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன : 2பொதுங்கர் நாடு. தென்பாண்டிநாடு, ஒளிநாடு, குட்டநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலைநாடு, 3குடநாடு என இவை- ‘தங்குறிப்பினவே’ என்றது அவை ஒரு வாய்பாட்டவே யல்ல; தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது. சேனா. இ-ள் : செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைசொல், எ-று என்றது. அவ்வந்நிலத்துத் தாம் குறித்த பொருள் விளக்குவதல்லது. அவ்வியற்சொல் போல எந்நிலத்தும் தம் பொருள் விளக்கா என்றவாறாம். பன்னிரு நிலமாவன : பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு.
1. அடையும் புடையும் கிடந்த - அடைந்தும் (சேர்ந்தும்) பக்கத்தும் கிடந்த 2. பொங்கர்நாடு-சேனா, பாடம் 3. சில பிரதிகளில் இது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது என்னும் கழகப்பதிப்பு (1973) |