பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவா வடதலை எனச் செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக் கொள்க. தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை என்பவற்றைப் பெற்றம் என்றும், தம்மாமி என்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவும் அன்ன 4தங்குறிப்பன என்று தனிமொழி தம்பொருள் உணர்த்து மாற்றுக்குச் சொல்லினார்: இருமொழி தொடருமிடத்துத் தள்ளை வந்தான் என வேண்டியவாறு வரப்பெறும் என்றாரல்லர் என்பது. தெய் திசைச்சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று இ-ள் : செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிறு நிலத்து முள்ளார் தத்தங் குறிப்பினையுடையது திசைச் சொல்லாகிய சொல். எ-று. பன்னிருநிலமாவன :வையையாற்றின் தென்கிழக்காகிய பொதுங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, கருங்குட்டநாடு குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலாடு, அருவா நாடு, அருவாவடதலை என்பன இவை செந்தமிழ், நாட்டகத்த.
4. தங்குறிப்பன- குறிப்பால் தத்தம் பொருள் உணர்த்துவன. திசைச்சொற்கள் அவ்வத்திசைகளில் இயற்சொல்லாக இருப்பினும்தமிழ் நிலத்தில் அவ்வியற் சொற்பொருளையே குறிப்பால் உணர்த்தும் என்றது தனிமொழியைப் பற்றியதேயன்றி தொடர்மொழியைப் பற்றியதன்று தள்ளை எனும் திசைச்சொல் தாய் என்னும் பொருள் தருவது. அது தமிழ்நாட்டில் வந்து வழங்குங்காலும் குறிப்பால் தாய் என்னும் பொருளே தரும். தொடர் மொழியில் அது வருங்கால் தள்ளை வந்தாள் என்று வரவேண்டுமே தவிர ‘தள்ளைவந்தான்’ என ஆண் பால் வினைமுற்றுடன் வந்தால் குறிப்பாகத் ‘தாய் வந்தாள்’ எனப்பொருள் கொள்ள வேண்டும் என்று கூறினரல்லர். தள்ளைவந்தாள் என்றே கூற வேண்டும். |