பக்கம் எண் :

வினைமுற்று பெயர் கொண்டு முடிதல் சூ. 33243

ஆ. மொ. இல.

Those (finite verbs) even when they
succeed one another end in nouns
in any way.

பி. இ. நூ.

நன். 323

பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரலது ஏற்பில முற்றே.

இல. வி. 230

மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பன முற்றியல் மொழியே
எத்திறத் தானும் பெயர்முடி பினவே.

தொன். வி. 104.

பெயரே ஏற்றுமற் றொன்றனை வேண்டாது
ஏற்பது வினை வினைக் குறிப்பு முற்றே.

இளம்

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது முற்றுச்சொல் என்று மேற் கூறப்பட்டனவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று.

உரை : மேற் சொல்லப்பட்ட முற்றுச் சொற்கள் தாம் எத்துணைச் சொல்லையும் அடுக்கிப் பலவாய் வரினும் பெயர் கொண்டு முடிதல் இலக்கணத்தன, எ-று.

வ-று : ‘உண்டான், நின்றான், ஓடினான், பாடினான் சாத்தன்’ எனவரும். இது 1வினை.

‘நல்லறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன்’ எனவும் வரும். இது வினைக்குறிப்பு.


1. வினை-தெரிநிலை வினை.