2மற்று ‘எத்திறத்தானும்’ என்றது என்னை யெனின், உண்டான் சாத்தன்’ என்பது பெயரை முன்னடுத்து, ‘சாத்தன் உண்டான்’ என்பது பெயரை பின்னடுத்து வரும் என்பது அறிவித்தற்கு ‘எத்திறத்தானும்’ என்பது. 3பிறவும் சொல்லுப, 4முன்னும் உரிய முற்றுச் சொல்லென என்பது. சேனா இ-ள் : மேற்சொல்லப்பட்ட முற்றுச் சொற்றாம், தத்தம் கிளவி பல அடுக்கி வரினும், தம்முட்டொடராது எவ்வாற்றானும் பெயரொடு முடியும், எ-று. உ-ம் : உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன், ‘நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன்’ என வரும். அடுக்கி வரினும் என்ற உம்மையான் வந்தான் வழுதி, கரியன்மால் என அடுக்காது பெயரொடு முடிதலே பெரும்பான்மை யென்பதாம். தம் பாற் சொல் அல்லது பிற பாற் சொல்லொடு 5விராயடுக்கின்மையின், ‘தத்தங்கிளவி’ என்றார்.
2. இங்கு முன் பின் என்பன இடமுன்னும் இடப்பின்னுமாம். சாத்தன் உண்டான் என எழுவாய்த் தொடராகக் கூறினாலும், உண்டான் சாத்தன் என வினைமுற்றுத் தொடராகக் கூறினாலும் வினை முற்று பெயரையே கொண்டதாகும் என்பது இப்பகுதிக் கருத்து. 3. சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், பார்க்க. 4. இத்தொடர் பொருந்தவில்லை. 5. விராயடுக்கின்மையின்-விரவியடுக்கி வருதல் இல்லாமையால். |