வினைமுற்று பெயர் கொண்டு முடிதல் சூ. 33 | 245 |
6என்மனார் புலவர், முப்பஃதென்ப என வெளிப்பட்டும் வெளிப்படாதும் பெயர் முடிபாம் என்றற்கு ‘எத்திறத்தானும்’ என்றார். “எவ்வயிற் பெயரும் வெளிப்படத்தோன்றி” (சொல். 88) என்றதனான் வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையான் ஈண்டு கூறல் வேண்டாவெனின், ஆண்டு முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நிற்றலும் உடைத்தென்றார்; இது முடிக்கும் பெயராகலின் ஆண்டு அடங்காது என்பது. முடிக்கப்படுவதனோடு முடிப்பதனிடை வேற்றுமை, வேற்றுமையோத்தினுட் (சொல் 66) கூறினாம். இன்னும் எத்திறத்தானும் என்றதனான், உண்டான் சாத்தன், சாத்தன் உண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்க. அஃதேல், முற்றிநிற்றலாவது மற்றுச் சொல் நோக்காமையாகலின், முற்றிற்றேல் அது பெயர் அவாய்நில்லாது; பெயர் அவாவிற்றேல் முற்றுச்சொல் எனப்படாது; அதனான் முற்றுச்சொல் பெயர் கொள்ளும் என்றல் மாறுகொளக் கூறலாம் எனின், அற்றன்று; ‘உண்டான் சாத்தன்’ என்பது எத்தையெனும் அவாய் நிலைக்கட் ‘சோற்றை’ என்பதனோடு இயைந்தாற்போல ‘உண்டான்’ என்பது யார் என்னும் அவாய் நிலைக்கண் ‘சாத்தன்’ என்பதனோடு இயைவதல்லது, அவாய் நிலையில்வழி ‘உண்டான்’ எனத்தானே தொடராய் நிற்றல் 1வினையியலுள்ளும் கூறினாம் என்பது. அஃதேல், சாத்தன் என்னும் பெயர் ‘சோற்றை’ என்பது போல அவாய் நிற்றலை யுள்வழி வருவதாயின், “எத்திறத்தானும் பெயர் முடிபினவே’ என விதந்தோதல் வேண்டாவாம் பிறவெனின், நன்று சொன்னாய்! அவாய் நிற்றலையுள் வழி வருவது அவ்விரண்டிற்கும் ஒக்குமேனும், ‘உண்டான்’ என்ற
6. முப்பஃதென்ப என்பதற்குப் புலவர் என்னும் முடிபு வெளிப்படாது நின்றது சாத்தன் உண்டான் என்பதில் சாத்தனை முடிப்பது உண்டான் என்பது. சாத்தன் முடிக்கப்படுவது. ‘எவ்வயிற்பெயரும்’ என்னும் சூத்திரத்தில் முடிக்கப்படும் பெயர்ச்சொல் வெளிப்படாதிருத்தல் பற்றிக் கூறப்பட்டது. இச்சூத்திரத்தில் முடிக்கும் பெயர்ச்சொல் வெளிப்படாமை கூறவேண்டுதலி்ன் ஆண்டு அடங்காது. அதனால் இங்கு எடுத்துக் கூறவேண்டுவதாயிற்று. 1. வினையியல் சூ. 37. |