வழி உண்டற் றொழிலாற் செயப்படுபொருள் உய்த்துணர்ந்து பின் அதன்வேறுபாடறியலுறிற் ‘சோற்றை’ என்பது வந்து இயைவதல்லது. சொற்கேட்டதுணையான் ‘எத்தை?’ எனக் கேட்பான் செயப்படு பொருள் வேறுபாடு அறிதற்கு அவாவாமையின், சோற்றை என்பது வருதல் ஒருதலையன்று. இனி ‘உண்டான்’ என்னும் சொல்லாற் பொதுவகையயான் வினைமுதல் உணர்ந்து கேட்பான் அதன்வேறுபாடறியலுறுதலின் ‘சாத்தன்’ என்பது வருதல் ஒருதலையாம். அதனான் இச்சிறப்பு நோக்கி விதந்தோதினார் என்பது. தெய் (வினையியல் இறுதிக்கண் உரை எழுதப்பட்டுள்ளது.) நச் இது முற்றுச் சொற்கு முடிபு கூறுகின்றது. இ-ள் : அவைதாம்-முற்கூறிய முற்றுச் சொற்கள்தாம், தத்தம் கிளவி அடுக்குந வரினும்-தத்தமக்கு உரிய வாய்பாடுகள் பலவாய் அடுக்கி வரினும் (உம்மையான் அடுக்காது ஒன்றே வரினும்), எத்திறத்தானும் பெயர் முடிபின-எவ்வாற்றானும் பெயர்ச் சொல்லை முடிபாக வுடைய, எ-று. உ-ம் : | உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் | | நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன் |
எனவும், வந்தான் வழுதி, கரியன்மால் எனவும் வரும். ‘எத்திறத்தானும்’ என்றதனால், உண்டான் சாத்தன் | சாத்தன் உண்டான் |
என முன்னும் பின்னும் பெயர் நிற்றலும், 1‘நின்றான் இருந்தான் கிடந்தான் தன்கேள் அலறச் சென்றான்’ (நாலடி. 29)
1. இதில் சென்றான் என்பதை முடிக்கும் சொல் வெளிப்படவில்லை. |