வினைமுற்று பெயர் கொண்டு முடிதல் சூ. 33 | 247 |
என அடுக்கிப் பெயர் வெளிப்படாது நிற்றலும், ‘முப்பஃதென்ப’ (நூன் மரபு.1) என அடுக்காது பெயர் வெளிப்படாது நிற்றலும் கொள்க. 2 ஈண்டு இலேசால் கொண்டது முடிக்கும் பெயர் வெளிப்படாது நின்றதற்கு என்றும், ‘எவ்வயிற் பெயரும்’ (வேற். 7) என்னும் சூத்திரத்தால் கொண்டது முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நின்றதற்கு என்றும் உணர்க. 3 ‘வேற்றுமைச் சொல்’ என வேறு ஓர் சொல் இன்றி முற்றும் எச்சமும் வேற்றுமையை விரிக்குமாறு போல, எழுவாயும் பயனிலையும் என வேறு ஓர் சொல் இன்றி முற்றும் எச்சமும் எழுவாயும் பயனிலையுமாய் நிற்கும் என்றும் உணர்க. முற்றுப் பெயர் கொண்டல்லது தாமாக முற்றி நில்லாமைக்குக்காரணம் ‘அவற்றொடு வருவழி) (வினை. 38) என்னும் சூத்திரத்துட் கூறினாம்.
2. இவன் யார் எனவினாய வழிப் ‘படைத்தலைவன்’ என்றால் இவன் என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. அப்பெயர் படைத் தலைவன் என்பதால் முடிக்கப்படுவது. இது ‘எவ்வயிற் பெயரும்’ எனும் சூத்திரத்தில் கூறப்பட்டது. உண்டான் என்புழி யார் என்று வினாயவழிச் சாத்தன் என்பதுவரும். அப்பெயர் வெளிப்படவில்லை. அது உண்டான் என்பதை முடிப்பது. இச்சூத்திர இலேசாற் கொள்ளப்பட்டது. இது வேறுபாடு. 3. உண்டான் எனும் முற்று உண்டலைச் செய்தான் எனவும் உண்டு எனும் எச்சம் உண்டலைச் செய்து எனவும் வேற்றுமையை விரிக்கும். அதுபோலவே உண்டான் எனும் முற்று அவன் எனும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாகவும் அவன் என்னும் தோன்றாப் பயனிலைக்கு எழுவாயாகவும், உண்டு எனும் எச்சம் அவன் எனும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாகவும் வரும். |