குறிப்பெச்சமாவது சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறித்த பொருள் எஞ்சி நிற்பது. இசையெச்சமாவது ஒருசொற்றனக்குரிய பொருளன்றிப் பிறிதும் ஒரு பொருளை இசைக்குமாறு வருவது. இவையெல்லாம் வழக்கிலும் செய்யுளிலும் வந்து பொருளை விளக்குதலின் எடுத்தோதினார். உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். நச் இது, முற்கூறிய எச்சச்சொற்கட்கு முடிபு கூறுவான் அவற்றது பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. இ-ள் : நெறிப்படத் தோன்றும்-முன்னர் எடுத்து ஓதிய இடங்களிலே முறைமைப்படத் தோன்றும், பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆ ஈரைந்தும் - பிரிநிலை முதல் இசையீறாகிய அப்பத்தும், எஞ்சு பொருட் கிளவி-எச்சச்சொல் என்று பெயராம், எ-று. எஞ்சிநிற்பதோர் பொருளையுடைய சொல் எனவே, ‘எச்சச்சொல்’ என்று பெயராயிற்று. இப்பத்தோடும் ‘எச்சம்’ என்பதனைக் கூட்டுக. இவற்றுள் பிரிநிலையெச்சம் முதலிய ஏழும் எச்சச்சொல் வந்து முடிதலையுடைய; ஏனைய மூன்றும் அச்சொல் வந்து முடியா என்று உணர்க. வினையெச்சமும் பெயரெச்சமும் வினைச்சொல் ஒழிபு; ஏனைய இடைச்சொல் ஒழிபாம். வெள் இஃது எச்சங்களாவன இவையெனத் தொகுத்துக் கூறுகின்றது. இ-ள் : பிரிநிலையெச்சம் வினையெச்சம் பெயரெச்சம் ஒழியிசையெச்சம் எதிர்மறையெச்சம் உம்மையெச்சம் எனவென் |