பிரிநிலை யெச்சம் சூ. 35 | 255 |
பிரிநிலை யெச்சம் 425. | அவற்றுட் | | பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. (35) | | | | (அவற்றுள் பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின) |
ஆ. மொ. இல. Of them the incomplete sense of exclusion is Completed by the sense of completing Words which are understood. பி. இ. நூ. இ. வி. 350 பிரிநிலை எச்சம் பிரிநிலை கோடலும் .................................................................................................. இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பிரிநிலை யெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை : பிரிநிலையென்ப இருவகைய, ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப் பிரிநிலையும் என; அவை பிரிக்கப்பட்ட பொருள் தன்னையே கொண்டு முடிக, எ-று. வ-று : அவனே கொண்டான், அவனோ கொண்டான் எனவரும். அவனேயெனப் பிரிநிலையெச்சம் ஏகாரத்தானின்று, 1அவனேயெனப் பிரிக்கப்பட்டானையே கொண்டு
1. இருந்தார் பலருள் அவன் பிரிக்கப்பட்டான். ஏகாரம் அவன் என்பதைச் சார்ந்து அவனே என வந்தது. இந்த ஏகாரம் எதை எச்சமாகக் கொண்டது எனின் அவன் என்பதையே நோக்கலின் அவன் என்பதையே கொண்டது என்னல் வேண்டும். |