பக்கம் எண் :

256தொல்காப்பியம்-உரைவளம்

முடிதல்; 2இவை அவற்றுக்கு முடிபாவன என்றவாறு;

சேனா

இ-ள் : மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரிநிலையெச்சம் ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப்பிரிநிலையும் என இரு வகைப்படும். அவ்விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லோடு முடியும், எ-று.

உ-ம் : தானே கொண்டான், தானோ கொண்டான் என்னும் பிரிநிலையெச்சம் 1பிறர் கொண்டிலர் எனப் பிரிக்கப்பட்ட பொருளை யுணர்த்துஞ் சொல்லான் முடிந்தவாறு கண்டுகொள்க.

அஃதேல், தான் எனப்பட்டானன்றே ஆண்டுப் பிரிக்கப்பட்டான்; பிறர் கொண்டிலர் என்பது அவனை யுணர்த்துஞ்சொல்லன்மையான் அவை பிரிநிலை கொண்டு முடிந்திலவால் எனின், அற்றன்று; தான் எனப்பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்ட வழிப் பிறரும் அவனிற் பிரிக்கப்பட்டமையான், அவை பிரிநிலை கொண்டனவேயாம் என்க.

பிரிநிலையோடு முடிதலாவது அவனே கொண்டான் என்றவழி, 2அவனே என்பது கொண்டான் எனப் பிரிக்கப்பட்ட பொருளை வினையெனக் கொண்டு முடிதல் என்றாரால் உரையாசிரியர் எனின், அற்றன்று; அவனே கொண்டான் என்புழி அவன் என்னும் எழுவாய் வேற்றுமை ‘கொண்டான்’ என்னும் பயனிலை கொண்டது; ஏகாரம் பிரிவுணர்த்திற்று;


2. இவை-ஏகார ஓகாரங்கள் உள்ள அவன் என்பன. அவற்றுக்கு-ஏகார ஓகாரங்களுக்கு.

1. இக்கருத்தை நச்சினார்க்கினியர் மறுப்பர்; பார்க்க.

2. அவனே என்பதிலுள்ள ஏகாரம் கொண்டான் எனப் பிரிக்கப்பட்ட பொருளாகிய அவன் என்பதையே வினையெனக் கொண்டு முடிதல்.