பக்கம் எண் :

பிரிநிலை யெச்சம் சூ. 35257

3ஆண்டு எச்சமும் எச்சத்தை முடிக்குஞ் சொல்லும் இன்மையான் 4அவர்க்கது கருத்தன்று என்க.

தெய்

பிரிநிலையெச்சம் முற்றுப் பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள் : மேற் சொல்லப்பட்டவற்றுள், பிரிநிலையாகிய எச்சம் அதன் கண் நின்றும் பிரிக்கப்பட்ட பொருளோடு தொடர்ந்து முடிவு பெறும், எ-று.

*உ-ம் : இவன் கல்வியுடையன் என்றவழிச் சொல்லுவான் இவ்வவையத்தாருள் எனக்கருதினானாயின் இவ்வவையத்தாருள் என்பது எஞ்சி நின்று பிரிநிலையெச்சமாயிற்று. இவட்குக் கண்ணழகிது என்றவழி மற்றுள்ள உறுப்புக்களின் என்பது எஞ்சி நின்றது. இவை பிரிக்கப்பட்ட பொருளோடு தொடர்புபட்டு முற்றுப்பெற்றவெனக் கொள்க.

நச்

இது முறையே பிரிநிலையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது.

இ-ள் : அவற்றுள்-முற்கூறியபத்தனுள், பிரிநிலை எச்சம்-ஏகாரமும் ஓகாரமுமாகிய பிரிநிலையெச்சங்கள், பிரிநிலை முடிபின-பிரிக்கப்பட்ட பொருள்மேல் வரும் சொல்லையே தமக்கு முடிபாக வுடையவாம், எ-று.

உ-ம் : அவனே கொண்டான், அவனோ கொண்டான். எனப்பிரிக்கப்பட்ட சுட்டுப் பெயரின் வினைகொண்டு முடிந்தன. இடைச்சொற்குத் தமக்கு இயைபின்மையின்


3. ஆண்டு-அவனே என்பதில் ஏ என்பது அவன் என்பதைக் கொண்டது என்னுமிடத்து. ஏ அவன் என்பன எச்சமாகவும் முடிக்கும் சொல்லாகவும் இல்லை

4. அவர்க்கு-ஆசிரியர் தொல்காப்பியர்க்கு.

* தெய்வச்சிலையார்க்கு ஏகார ஓகாரங்கள் இல்லாமலே பிரிநிலை எச்சம் வரும் என்பது கொள்கை.